பேலியகொடை மனிங் சந்தைத் தொகுதியில் உத்தியோகபூர்வமற்ற முறையில் முன்னெடுக்கப்படும் சிற்றுண்டி வியாபாரத்தை முறைப்படுத்த புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்களுக்கு முறையான நடமாடும் விற்பனைக்கூடங்களையும் தேவையான உபகரணங்களையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான நடமாடும் விற்பனைக்கூடங்கள், உபகரணங்கள் வழங்கும் வைபவம் நேற்று (04) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு,சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் பேலியகொடை புதிய மனிங் சந்தைத் தொகுதியில் நடைபெற்றது.
