மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க நேற்று (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிசிற்றர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார்.

தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.