22 இற்கு எதிரான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில்

22 இற்கு எதிரான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றில் பரிசீலனைக்கு வருகிறது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நாளை (01) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனுக்களைப் பரிசீலிக்க பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் ஐவர்கொண்ட நீதியரசர்கள் கொண்ட குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன், கிஹான் குலதுங்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.