புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்படவிருக்கிறார்.
இவரை நியமிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிரேரணையை அரசியலமைப்புப் பேரவை நேற்று முன்தினம் (23) அங்கீகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலம் நீதியரசராகக் கடமையாற்றும் பிரீத்தி பத்மன் சூரசேனவைப் பிரதம நீதியரசர் பதவிக்காக ஜனாதிபதி பரிந்துரைத்திருக்கிறார்.
தற்போதைய பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ ஜூலை 27 ஆம் திகதியுடன் ஓய்வுபெறுகிறார்.

