கல்முனை வடக்கு வைத்தியசாலையின் நற்பெயரை காப்போம் என்று வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நற்பெயரைப் பாதுகாப்பதுடன், மக்களுக்குச் சிறந்த மருத்துவ சேவையைத் தொடர்ந்தும் வழங்குவதற்கு அனைத்து ஊழியர்களும் ஒற்றுமையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விபத்தொன்றின் பின்னர் இன்று (24) பணிக்குத் திரும்பிய அவர், வைத்தியசாலை அதிகாரிகளைக் கூட்ட மண்டபத்தில் சந்தித்து உரையாற்றினார். பணிமாற்றம் செய்யப்பட்ட சுகாதார சிற்றூழியர்கள் தொடர்பான விடயங்கள் உள்ளிட்ட நிர்வாகச் சிக்கல்கள் இருந்தபோதிலும், அவற்றைத் தாண்டி நோயாளிகளுக்கான சேவையை முன்னெடுப்பதே முக்கியம் என அவர் தெரிவித்தார்.


கொவிட் காலத்தில் ஊழியர்கள் வெளிப்படுத்திய ஒற்றுமையையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்த அவர், எதிர்காலத்திலும் அதே ஒற்றுமையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.
ஜலீல் -கல்முனை வடக்கு வளாகத்திலிருந்து
