பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர். பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனியா இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அன்பர்கள் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார்கள்!

இக்காலப்பகுதியில் கிடைக்கப்பெறாத எந்தவொரு தரவும் மீண்டும் ஒருபோதும் தரவு அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, ஏற்கனவே அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சு இதுவரை எவ்வித தீர்வையும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, பி.எச்.மிகஸ்தெனியாவின் தன்னிச்சையான இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது குறித்து நியாயமான விசாரணையை நடத்துமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக, கொழும்பு துறைமுக சுகாதார அலுவலகம்,கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகம் ஆகியவற்றின் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியையும் தாம் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த விடயங்கள் தொடர்பாக நியாயமான விசாரணைக்குத் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.