வீடுகளைப் புனரமைக்க நிதியுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (28) பிற்பகல் நடைபெற்றது.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் 71 பயனாளிகளுக்கு சுமார் 71 மில்லியன் ரூபாய் பெறுமதியான காசோலைகள் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (28) பிற்பகல் வழங்கப்பட்டன.
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் பொறியியலாளர் ஞா. சுகுமாரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கினார்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட 71 பயனாளிகளில் 30 பேருக்கு 150,000ரூபா வீதமும் 17 பேருக்கு 100,000ரூபா வீதமும், 24 பேருக்கு 40,000ரூபா வீதமும் காசோலைகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பில் வீடுகளைப் புனரமைக்க நிதியுதவி காசோலைகள் வழங்கும் வைபவத்தில் வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் எஸ்.விநோராஜ், வீதி போக்குவரத்து அதிகார சபையின் தவிசாளர் பிரிதௌஸ் நளிமி உள்ளிட்ட மாகாண வீடமைப்பு அதிகார சபையின் உயரதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
எஸ்.வரதராஜன்
