கற்பிட்டி தமிழறிஞர் சைமன் காசிச் செட்டி கைநூல்

தமிழறிஞர் சைமன் காசிச் செட்டி தகவல் கையேடு கையளிக்கும் நிகழ்ச்சி இன்று (27) நடைபெற்றது.

கற்பிட்டியில் பிறந்த தமிழ் ஆய்வுத்துறைப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி இலங்கையின் முதலாவது சிவில் சேவையாளர் ஆவார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டு இவ் வருடத்திற்கான சாகித்ய விழா புத்தளம் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.

இதன் நிமித்தம் தமிழறிஞர் சைமன் காசிச் செட்டி தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்குமாறு கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கலாசார அபிவிருத்தி அதிகாரி எஸ்.ஏ.எஸ் சமரசிங்க வேண்டுகோள் வடுத்தார்.

அதற்கமைய செந்தமிழ்ச் செல்வி எனும் சஞ்சிகையில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தமிழவேள் கந்தசாமி எழுதிய தகவல்களை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கலாச்சார அபிவிருத்தி அதிகாரியிடம் கற்பிட்டி சைமன் காசிச் செட்டி பவுண்டேஷனின் ஸ்தாபகர் கலாபூஷணம் சமூக செயற்பாட்டாளர் ஜே. பத்மநாதன் திங்கட்கிழமை (27) வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் கற்பிட்டி சைமன் காசிச் செட்டி பவுண்டேஷனின் உயர் பீட உறுப்பினர் ஓய்வு நிலை ஆசிரியர் கோ குணசேகரும் கலந்து கொண்டார்.

கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்