வருடாந்த தெவிநுவரை காவடி ஆட்டத்ததிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

தெவிநுவரை காவடி ஆட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தெவிநுவரை உத்பலவர்ணா ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசலை பெரஹராவில் கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடியாட்டக்குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கேற்பதற்கு அனுமதி வழங்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தீர்மானித்துள்ளார்.

மாத்தறை மாவட்டச் செயலகத்தில் இன்று (27) மாலை நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாளை (28) நடைபெறும் பெரஹராவின் பாதுகாப்புக்காகக் கூடுதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரையும் பொலிஸாரையும் ஈடுபடுத்துவதற்கும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.