மஸ்கெலியா நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ விபத்து

நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்ததில் இருவர் பலியான சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றது.

மஸ்கெலியா, நல்லதண்ணி மோகினி அருவியில் முச்சக்கர வண்டி வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தனர்.

நல்லதண்ணி மோகினி அருவியில் இன்று 22ஆம் திகதி காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் மூவர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் மஸ்கெலியா மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல அம்பியுலன்ஸ் வசதி இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் மாணவர்களாவர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்கு உள்ளானதாக எமது நிருபர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் இன்று காலை ஏழு முப்பது அளவில் நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான சாலையில் மோகினி அருவி பகுதியில் நிகழ்ந்தது.

மேலும் வாசிக்க: கத்தரகமை தேவாலய பந்தல் புதுப்பிக்கும் விழா!

நல்லதண்ணி தோட்ட கீழ் பிரிவில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் மஸ்கெலியா நோக்கி பயணித்த வேளையில் வேக கட்டுப்பாட்டை இழந்து நல்லதண்ணி மோகினி அருவியில் ஓட்டோ வீழ்ந்துள்ளது.

அப்போது அதில் கந்தசாமி செல்வம், வயது 46, வண்டியின் ஓட்டுநர் ராமலிங்கம் திவாகரன் வயது 26, ஆர்.எம்.விஸ்வதிவங்கர வயது 13, மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரியின் கல்வி பயிலும் மாணவன்,

அதே தேசிய கல்லூரியில் பயிலும் செல்வம் தக்ஷனா வயது 13, செல்வம் கம்ஷிகா வயது 16 ஆகியோர் பயணித்துள்ளனர்.

இதையும் வாசிக்க: கடுங்காற்று குறித்து எச்சரிக்கை அறிவிப்பு

முச்சக்கர வண்டி தடம் அருவியில் பாய்ந்த வேளையில் அதன் ஓட்டுநர் ராமலிங்கம் திவாகரன் வயது 26,கந்தசாமி செல்வம் வயது 46 ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக நல்லதண்ணி பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் பாடசாலை மாணவ மாணவிகள் மூவரும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு வரப்பட்டு,மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

இவர்களை கிளங்கன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் வசதி இல்லாததால், சுமார் ஒன்றரை மணித்தியாலம் தாமதித்தே அனுப்பிவைக்கப்பட்டதாக மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ராஜ்குமார் தெரிவிக்கின்றார்.

இந்த மருத்துவமனையில் இருந்த அம்பியுலன் அந்த நேரத்தில் இல்லாததால் அக்கரபத்தனையிலிருந்து ஓர் அம்பியுலன்ஸ் வந்தே டிக்கோயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக திரு.ராஜ்குமார் தெரிவிக்கின்றார்.

மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்,கௌசல்யா, சரத்

Follow us on Facebook