வரலாற்றுச் சிறப்புமிக்க கத்தரகமை தேவாலய பந்தல் புதுப்பித்தல் விழா

கத்தரகமை தேவாலய பந்தல் புதுப்பிக்கும் விழா நேற்று (20) நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் (கத்தரகமை தேவாலய)முன்றலில் அமைந்துள்ள பழைமையான பந்தலைப் புதுப்பிக்கும் விழா, (20. 07.2026) திங்கள் சிறப்பாக நடைபெற்றது.

கதிர்காம பஸ்நாயக்க நிலமே ஆரச்சிகே திலின மதுசங்கவின் தலைமையிலும் ருஹுணு கத்தரகமை மகா தேவாலயத்தின் பிரதம காப்பு துரந்தரரான சரத் சேபால டி. ரத்நாயக்கவின் வழிகாட்டுதலிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில், பிரதான ஊர்வலத்தில் செல்லும் யானைகளின் பங்களிப்புடன், மாணிக்க கங்கையிலிருந்து பச்சைகொத்துப்பந்தத்தைக் கழுவிச் சுத்தம் செய்து மீண்டும் அமைக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட இந்த கொத்து பந்தல், அடுத்த ஆண்டு எசல பெரஹேராவின் ஆறாம் நாளில் மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கப்படும்.

சா. நடனசபேசன்

FOLLOW US ON FACEBOOK