இராஜதந்திரிகளின் வருகை சுற்றுலா வளர்ச்சியின் அடையாளமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
புதிய மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரின் J.S அருள்ராஜ் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் தலைமையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
கடந்த சுற்றுலாத்துறை அபிவிருத்தி கூட்டத்தின் முன்னேற்ற அறிக்கை மாவட்ட மட்ட பிரதேசங்களில் இனங்காணப்பட்ட சுற்றுலாத்துறை அபிவிருத்தி சம்பந்தமாகவும் சுற்றுலாத்துறை நிறுவனங்களின் கோரிக்கைகள்



மாகாண சுற்றுலா துறையின் முன்னேற்ற நிலவரம் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்ற பகுதிகளை அபிவிருத்தி செய்தல் ஏனைய திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்தல் போன்ற பல விடயங்கள் இங்கு ஆராயப்பட்டன.
முக்கியமாக இராஜதந்திரிகளின் வருகை சுற்றுலா வளர்ச்சியின் அடையாளமாகத் திகழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்களங்களில் தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் மட்டு மா நகர சபையின் ஆணையாளர் எஸ் தனஜெயன் சுற்றுலா திணைக்கள உயர் அதிகாரிகள் என பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்டனர்
மட்டக்களப்பு எஸ். வரதராஜன்
இதையும் படியுங்கள்: மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் தேசிய திட்டம்
