மக்களின் நலன் கருதி மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்

மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் தேசிய வேலைத் திட்டம் பாராளுமன்ற உறுபபினர் கந்தசாமி பிரபுவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் அரசாங்கத்தின் திட்டத்தின்கீழ் பொது நிர்வாகம் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பாலங்கள் அமைக்கப்படுகின்றன.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் கிராமிய பாலங்களை அமைக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு, மண்முணைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட செல்வா நகரில் பாலம் அமைக்கப்படுகிறது.

3.3 மில்லியன் ரூபாய் செலவில் இடம்பெற்ற கிராமிய பாலம் அபிவிருத்தி நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.

மண்முணைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ரோஹினி விக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்

பாராளுமன்ற உறுப்பினர்களான இளைய தம்பி ஸ்ரீநாத், ஞான முத்து ஸ்ரீனேசன், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் றிப்கா சபீன் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்

கடந்த பல வருடங்களாக இப்பதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காலங்களில் இப்பதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்போது இந்தப் பிரச்சனைக்கு மட்டக்களப்பில் கிராமிய பாலம் அமைக்கும் திட்டம் நிரந்தரத் தீர்வு வழங்குவதாக அமைகிறது.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்

இதையும் வாசியுங்கள்: மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லை!