WhatsApp Image 2026-07-01 at 19.17.13

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு ரோட்டரியின் மருத்துவ முகாம் இன்று (01) நடைபெற்றது.

பட்டிருப்பு றொட்டரி கழகம் ஏற்பாடு செய்திருந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாம், பிரதேச செயலாளர் உ. உதயஸ்ரீதர் தலைமையில், பட்டிருப்பு றொட்டரி கழக தலைவர் ரோட்டரியன் நிறோசாந் பங்குபற்றுதலுடன் இன்று (2026.07.01) புதன்கிழமை பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், கண் பரிசோதனை, மூக்குக் கண்ணாடி வழங்கல் போன்றன இடம் பெற்றன.

இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்ததுடன், களுவாஞ்சிக்குடி நந்தவன முதியோர் இல்ல முதியோர்களும் பங்கேற்று பயனடைந்தனர்.

இம் மருத்துவ முகாமில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், றொட்டரி கழக திட்ட உத்தியோகத்தர் நீலன், செயலாளர் த.லோகிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சா. நடனசபேசன்