தியத்தலாவைப் பகுதியில் இ.போ.ச.பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 42 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி இன்று அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் விழுந்தது.
ஒருவர் ஆபத்தான நிலையில் பதுளை மருத்தவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எஸ். ஆர். இரவீந்திரன்
