இரத்தினபுரி சமன் தேவாலய உற்சவம் ஜூலை 15 இல் ஆரம்பம்

இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சபரகமுவை மகா சமன் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் ஜுலை மாதம் 15ஆம்‌‌ திகதி ஆரம்பிக்கப்பட்டு ஜுலை மாதம் 30 ஆம் திகதி வரை நடைபெறும் என ‌சமன் தேவாலயத்தின் திவடன நிலமே இசான் சங்க மாப்பிட்டிகமை கூறினார்.

இரத்தினபுரி சென்சூரியா உணவகத்தில் இன்று 25 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்குத் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:

15ஆம் திகதி கப் கட்டும் (கொடியேற்றம்)நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த நாள் தொடக்கம் 19ஆம் திகதி வரை கும்பல் பெரஹராவும் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தேவாலய பெரஹெராவும் 25ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை மகா பெரஹராவும் நடைபெறும். 30ஆம் திகதி நீர் வெட்டும் நடைபெறும்

உற்சவ காலங்களில் பொலிசார்,இராணுவத்தினர் இணைந்து தேவாலயத்தின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவார்கள். இம்முறை கண்டி தலதா மாளிகையில் இருந்து 03 யானைகள் கொண்டு வரப்படும்

கடந்த காலங்களை‌ விடத் தற்போது சமன் தேவாலயம் தூய்மையாகவுள்ளதுடன் பூசை வழிபாடுகள் முறையாக நடைபெறுகின்றன, என்றார்.

இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்