மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கைவிடப்பட்ட கட்டடங்கள் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிக்கின்றார்.
கடந்த கால ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட திட்டமிடப்படாத அபிவிருத்தி திட்ட பணிகளால் பல கட்டடங்கள் இன்று குற்ற செயல்கள் புரியும் இடமாக காணப்படுகின்றன.

இதேவேளை டெங்கு நோய் பரவ இவ்வாறு பாவனையற்ற இடங்கள் காணப்படுவதால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை இனம் கண்டு புணரமைப்பு செய்து மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளது எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு வவுணதீவு பிரதேசத்தில் அண்மையில் பல அபிவிருத்தி திட்டங்களை மக்களின் பாவனைக்கு கையளித்தபோது தெரிவித்தார்.

அங்கிருந்த பிரஜா சக்தி உறுப்பினர்களால் இவ்வாறான கவனிப்பாரற்றுக்கிடக்கும் நரிப்புல் தோட்ட கிராம பகுதியில் கட்டடங்களை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதன் பின்பு இவ்வாறு தெரிவித்தார்.
அடுத்து வரும் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இதனைக் கருத்தில் கொண்டு மிக விரைவாக இவ்வாறான கட்டடங்களை மக்களின் பாவனைக்கு கையளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
எஸ். வரதராஜன்
