சாதாரண தரப் பரீட்சை - 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி

2025 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இம்முறை அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை 11,790 என அவர் குறிப்பிட்டார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம், கணிதப் பாடங்களில் சித்தியடைந்த மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது.
விஞ்ஞானத்தில் 70.1%,கணிதத்தில் 72.03% மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.