இந்தோனேசியாவின் சுலாவாசி தீவில் பாரிய நில நடுக்கம்!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (16) காலை பதிவாகியுள்ளது.

பாலி நகருக்குத் தென்கிழக்கே சுமார் 42 கி.மீ தொலைவில், 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுனாமி அபாயம் இல்லை என இந்தோனேசிய புவி இயற்பியல் நிறுவனம் அறிவித்துள்ளது.

உயிர்ச்சேதம் அல்லது பெரிய பொருள்சேதம் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.