சிங்கப்பெண் அதிரடிப்படை சென்னையில் முதல் கைது!

வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து, பெண்​ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரைச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்​படையின் அதிகாரிகள் கைது செய்து மகளிர் காவல்துறையில் ஒப்​படைத்​தனர்.

இதன்​மூலம், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை சென்​னை​யில் தனது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்​நிலை​யில், சென்னை அயனாவரம் பகு​தி​யில் 37 வயதுடைய பெண் ஒரு​வர் புதன்கிழமை (ஜூன் 10) பிற்பகல் வீட்​டில் தனி​யாக இருந்​துள்​ளார்.

அந்த நேரத்​தில் அதே பகு​தி​யைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற ஆடவர் மது​போதை​யில் அப்​பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அப்​பெண் அதிர்ச்​சி​யில் கூச்​சலிட்​டுள்​ளார்.

சத்தத்தைக் கேட்ட அக்​கம்​பக்​கத்​தினர் திரண்​டனர். இதையறிந்த அந்த நபர் பெண்ணைத் தள்​ளி​விட்டுத் தப்பி ஓடி​னார். இதுகுறித்து அப்​பகுதி மக்​கள் காவல்துறைக் கட்​டுப்​பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்​தனர்.

உடனே சிங்​கப்​பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்​வரியும், பெண் காவலர்​களும் விரைந்து சென்று தப்​பியோடிய சுரேஷைத் தேடிக் கண்டுபிடித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷை நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அதிகாரிகள் சிறை​யில் அடைத்​தனர்.

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை ஆரம்​பிக்​கப்​பட்டபின், பதி​யப்​பட்ட முதல்​ வழக்​கு இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்ட சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படையை முதல்​வர் விஜய் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைத்​தார்.