சிலாபம் ரயில் முச்சக்கர வண்டியை மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிலாபத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இரயில் முச்சக்கரவண்டியை மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கப்புவத்தைக்கும் கந்தானைக்கும் இடைப்பட்ட இரயில்வே குறுக்குவழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
