xr:d:DAFPA4-cxsE:2090,j:3218239841833966770,t:24020705
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடுகிறது.
சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 09.30 இற்கு பாராளுமன்றம் கூடுவதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடுவதுடன், இன்றைய தினம் முத்திரை தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுள்ள கட்டளை, துறைமுகங்கள்,விமான நிலையங்கள் அபிவிருத்திச் சட்டத்தின் கீழுள்ள கட்டளை ஆகியவற்றுக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளது.
இவற்றுக்கு மேலதிகமாக, உற்பத்தி தீர்வை விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழுள்ள கட்டளை, பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழுள்ள தீர்மானம் ஆகியன இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், பொதுச் சேவை பாதுகாப்புச் சட்டத்தின் கீழான தீர்மான விவாதத்தின் பின்னர் அங்கீகரிக்கப்படவும் உள்ளது.
