மத்திய,மேற்கு ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், தெஹ்ரானின் நகர்ப்புறப் பகுதிகள் இலக்கு வைக்கப்படவில்லை என்று ஈரானிய உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
ஈரானின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள அந்த நாட்டு ஆட்சிக்குட்பட்ட இராணுவ இலக்குகளைத் தமது வான்படை தாக்கியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
தெஹ்ரான் தீயணைப்புத் துறையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், திங்கட்கிழமை அதிகாலை வேளையில் ஈரானிய தலைநகரின் மேற்குப் பகுதிகளில் குறைந்தது இரண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்ரிஸ், இஸ்பஹான் ஆகிய நகரங்களிலும், கராஜ் நகருக்கு அருகிலும் பல வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சேதங்களின் பரிமாணம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
