போதைவஸ்துளை மாணவர்களுக்கு விநியோகித்த சந்தேக நபர் கைது

ஹெரோயின்,போதை மாத்திரைகளை மாணவர்களுக்கு விநியோகித்த ஒருவர் சம்மாந்துறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் போதைப் பொருளுடன் நடமாடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் நீண்டகாலமாகப் பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களுக்குப் போதைப் பொருள் விநியோகித்து வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கௌசல்யா