பதின்ம வயதுடைய பிக்குவைத் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய தேரரை அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை – மத்திய முகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுகந்தகமை பகுதியில் அமைந்துள்ள விகாரையில் செவ்வாய்க்கிழமை(2) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விகாரையில் தங்கி இருந்த பதின்ம வயது பிக்குகளில் மூவர் அண்மையில் தப்பிச்சென்றதை அறிந்த ஊர் மக்கள் விகாரையை நோக்கி ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொள்ள தயாரான வேளை இந்த விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.
மேலும் பிக்குகள் இருவர் பொலிஸாரினால் வாக்குமூலம் பெறுவதற்காக விகாரையில் இருந்து அழைத்துச் சென்ற நிலையில்,சந்தேக நபரான 41 வயது தேரர் தீகவாவி பிரதேசத்திற்குத் தப்பிச் சென்றிருந்ததாகத் தெரியவந்துள்ளது.
பின்னர் மற்றுமொரு பிக்கு சகிதம் 41 வயதுடைய தேரர் தீகவாபி பகுதியில் இருந்து மத்திய முகாம் பொலிஸாரிடம் சரண் அடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தில் வாக்குமூலம் வழங்கிய இளம் பிக்குகளில் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய பிக்குவை மத்திய முகாம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு அவரை மருத்துவ பரிசோதனைக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைதான 41 வயது தேரரை இன்று(3) அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய மகாம் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
