முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கமை பொலிஸாரால் கைது

தலங்கமை பொலிஸ் நிலையத்தில் இன்று (25) காலை முன்னிலையான நிலையில், அவர் கைதாகியுள்ளார்

கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ வெற்றி தின நிகழ்வுக்கான ஒத்திகைக்குத் தடையேற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்க அவர் கடந்த சனிக்கிழமை தலங்கமை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் அன்றைய தினம் முன்னிலையாகாது இன்று பொலிஸ் நிலையத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.