கொழும்பு கம்பன் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கா விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
நேற்று (03) பிற்பகல் கம்பன் விழா வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது.
இங்குக் கருத்துரைத்த ஜனாதிபதி இலக்கியம், நடனம்,இசை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினரைக் கலாசார விழுமியங்கள்,தேசப்பற்றுடன் கூடிய தர்மத்தின் வழியில் வழிநடத்துவதற்கு கம்பன் கழகம் ஆற்றிவரும் சேவையைப் பாராட்டினார்.
சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில் அகில இலங்கை கம்பன் கழகம் 1980 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டது.
