தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் இன்று மே04 வெளியாகின்றன.

ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக மட்டுமின்றி இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய அளவிலான வாக்குகளைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அரசியல் ரீதியான பல மாற்றங்கள் வரும் காலங்களில் ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

அதற்கேற்றவாறு தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்துக் கணிப்புகளும் தீர்க்கமான முடிவைக் கூறமுடியாதபடி வெளியாகியுள்ளன.

தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் திமுக, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் அதிமுக, புதிதாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் தவெக, நாதக ஆகிய கட்சிகள் தேர்தல் முடிவை நோக்கி பெரும் எதிர்பார்ப்பில் உள்ளன.

வெற்றி பெறும் வேட்பாளர்களை மற்ற கட்சிகள் (திமுக, அதிமுக) விலைக்கு வாங்க முயற்சிப்பதைத் தடுக்க, நடிகர் விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.