இந்தியாவில் தற்போதைய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகிய அவைகளின் உறுப்பினர்களில் 21 சதவீதத்தினர் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 5,204 மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில் 1,107 பேர் அதாவது, ஐந்தில் ஒரு பங்கினர் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என அந்த ஆய்வு கூறுகிறது.
நாடாளுமன்றத்தில்தான் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்களின் விகிதம் அதிகம் என்றும் அது குறிப்பிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 31 சதவீத்தினரும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் 20 சதவீதத்தினரும் அரசியல் குடும்பங்களிலிருந்து வந்தவர்கள்.
தேசியக் கட்சிகளைப் பொறுத்தவரை அரசியல் பின்புலம் கொண்ட உறுப்பினர்களின் பட்டியலில் காங்கிரஸ் கட்சி முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் பட்டியலில் அடுத்த இரு நிலைகளில் இருக்கின்றன.
மாநிலக் கட்சிகளில் தேசியவாத காங்கிரசும் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியில் 42 விழுக்காடு மக்கள் பிரதிநிதிகள் அரசியல் குடும்பப் பின்னணி கொண்டவர்கள் என்று தமிழ்முரசு செய்தி காறுகிறது.
38 சதவீத பிரதிநிதிகளுடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் 36 சதவீத பிரதிநிதிகளுடன் தெலுங்கு தேசமும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
18% அரசியல் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகளுடன் திமுக அடுத்த நிலையில் உள்ளது.
