வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதைத் திருடர்களுக்குச் சொல்லும் வகையில் சமூக ஊடகப் பதிவுகளை இடவேண்டாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் – சட்டத்தரணி – எப்.யூ.வுடலர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
புத்தாண்டு காலப் பகுதியில் வீட்டைவிட்டு வெளியில் சென்றால், செல்லும் இடங்களிலிருந்து புகைப்படம் எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவிட்டால், அது கள்ளர்களுக்கு வாய்ப்பாகப் போகும்.
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீட்டில் உள்ள பணம், நகை உளளிட்ட பெறுமதியானவற்றைக் கள்ளர்கள் களவாடிக் செல்வதற்கு வசதியாகிவிடும்.
எனவே, வெளியில் சென்றால், வீட்டில் ஆளரவம் இல்லை என்பதைச் சமூக ஊடகப் பதிவுகளில் உறுதிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மிகவும் தூர இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால், அதுபற்றித் தமது ஊர் பொலிஸ் நிலையத்திலோ ஊர்காவற்குழுவின் தலைவருக்கோ அறிவித்துவிட்டுச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
கௌசல்யா
