ஈரானை அடுத்த 2-3 வவாரங்களில் மிகக் கடுமையாகத் தாக்குவோம்!

ஈரானை அடுத்த 2-3 வவாரங்களில் மிகக் கடுமையாகத் தாக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

ஈரான் உடன்பாட்டுக்கு வராவிட்டால், அவர்களின் முழு மின்சாரக் கட்டமைப்பையும் குண்டு பொழிந்து தகர்க்கப்போவதாகவும் திரு. டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானில் மகத்தான வெற்றிகளை அடைந்துள்ளோம். ஈரான் கடற்படை, வான்படை அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆயுதப்படைகள் சிறப்பாக செயல்படுகின்றன.

ஈரான் ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் அவர்களிடம் எரிசக்தி நிலையங்களை ஒவ்வொன்றாக தாக்க உள்ளோம். ஹோர்முஸ் நீரிணை வழியாக அமெரிக்காக்கு எண்ணெய் தேவையில்லை.

அமெரிக்கா தனது ஆற்றல் தேவைகளில் தன்னிறைவு அடைந்துள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

திரு. டிரம்பின் இந்த உரையை அடுத்து ஈரானின் தாக்குதல்கள் தீவிரமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.