கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு

இன்று (02) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை கொழும்புவின் பல பகுதிகளில்
ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

பத்தரமுல்லை, பாமன்கடை, வெள்ளவத்தை,நாவல ஆகிய பகுதிகளில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இரவு 10.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 01.00 மணி வரை மூன்று மணித்தியாலம் நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்தை,பன்னிபிட்டி ஆகிய பகுதிகளில் இரவு 08.00 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.பின்னர் அடுத்த மூன்று நாள்களுக்குத் தொடர்ந்து நீர் விநியோகம் தடையின்றி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.