இரத்தினபுரியில் வர்த்தக நிலையம் தீப்பிடித்து நாசம்!

இரத்தினபுரி புளுங்குபிட்டியிலுள்ள‌ பிரபல வர்த்தக நிலையம் ஒன்று இன்று (30) அதிகாலை வேளையில் திடீரென தீப்பிடித்து ‌‌‌எரிந்ததால் வர்த்தக ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலையத்தின் ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌கீழ் மாடி முற்றாக சேத‌மடைநதுள்ளது.

அதிகாலை வேளை‌ வர்த்தக நிலையம் தீப்பிடித்து எரிந்தபோது கடை‍ ஊழியர்கள் பொலிசாருக்கு‌ அறிவித்த பின்னர் அவர்களின் ஒத்துழைப்புடன் தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு‌ தீயைக்‌‌ கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். ‌‌‌‌எனினும்‌‌
தீப்பிடித்ததற்கான காரணம் கண்டறியப்படவில்லை

இந்த‌‍ விபத்து‌‌ காரணமாக. ‌உயிர்ச்சேதங்கள்‌‌ எதுவும்‌ ஏற்படவில்லை..எனினும்‌ பல‌ கோடி ரூபாய் பெறுமதியான சொத்துகள் சேதமடைந்தன. இது‌ குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்