வள்ளுவம் அமைப்பால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்

வள்ளுவம் அமைப்பின் ஈராண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பல நலன்விரும்பிகளினதும் வள்ளுவம் அங்கத்துவரினதும் நிதி பங்களிப்புடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் அண்மையில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு வதிவிடப் பொறியலாளர் த. அமிர்தலிங்கம் வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் க. தியாகராஜா, ஆசிரியர் செ. திவாகரன் பாண்டிருப்பு மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி. நிலந்தினி ரவிச்சந்திரன், உதவி பொறியியலாளர் ச. குமணரோஜன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

2024/ 2025 உயர்தரம் கற்ற மாணவர்களினால் வள்ளுவம் அமைப்பு உருவாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்குக் கல்வி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சா. நடனசபேசன்

வள்ளுவம் அமைப்பால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்