பிரமிளா பிரதீபன் எழுதிய சிறுகதை தொகுப்பு நூல் வெளியீடு

பிரமிளா பிரதீபன் எழுதிய கொலைச்சொல் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்ச் 21 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 இற்குக் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறுகிறது.

விழாவுக்குத் தமிழ்ச் சங்கத் தலைவி சட்டத்தரணி – திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமைதாங்குகிறார்.

புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்துகிறார். பிரமிளாவின் படைப்புகள் பற்றிய ஆய்வினை பேராசிரியர் சி. மௌனகுரு நிகழ்த்துகிறார். எழுத்தாளர் உமா வரதராஜன் நூலாய்வு செய்கிறார்.