வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இன்று முதல் கியூஆர் முறை

எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் செயல்படுத்தப்படுகிறது.

பதிவுசெய்யப்பட்ட QR குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்கப்படாது.

QR குறியீடு முறையின் கீழ் வாரத்திற்கு ஒரு வாகனத்திற்கு எரிபொருள்:

பேருந்துகள் – 60 லீற்றர் ,

மோட்டார் சைக்கிள்கள் – 5 லீற்றர், கார்கள் – 15 லீற்றர், வேன்கள் – 40 லீற்றர்,

லொறிகள் – 200 லீற்றர்,

இதர வாகனங்கள் – 25 லீற்றர்,

முச்சக்கர வண்டிகள் – 15 லீற்றர்,

சிறப்பு தேவை வாகனங்கள் – 40 லீற்றர்

QR குறியீட்டை உருவாக்க இங்கே கிளிக் செய்யவும்: https://www.fuelpass.gov.lk