பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக 48 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள தாகப் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிக்கின்றார்.
பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக வறுமையை ஒழிக்கும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதற்கு அமைவாக நெல் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்டிப்பளை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற இப்பகுதி பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்களுடனான விசேட அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு தெரிவித்தார்
இப்பகுதி கூடுதலாகக் காட்டு யானை தாக்குதலுக்குப் பாதிக்கப்படுவதால் சூரிய சக்தி மூலம் வீதியோர விளக்குகளை ஒளிரச் செய்வதற்காக 5 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இப்பிரதேசத்தில் உள்ள பொது மயானங்கள்,பூங்காக்கள் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் தாந்தாமலை பிரதான வீதிக்கு 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் பாஃஉ பிரபு தெரிவித்தார்.
மட்டக்களப்பு வரதன்






