இரத்தினபுரி புனித லூக்ஸ் மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் அமில தண்டக்கார, (52 வயது) விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பெல்மதுளை, பாத்தக்கடை பகுதியில் எம்பிலிபிட்டி- கொழும்பு பிரதான வீதியில் நேற்று முன் தினம் (11) இரவு இவர் விபத்தில் சிக்கினார்.
தனது வீட்டுக்குத் தேவையான இரவு நேர உணவை அருகிலுள்ள பிரதான வீதியில் உள்ள உணவகத்தில் வாங்கிய பின்னர் வீதியோரத்தில் நடந்து செல்லும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியதில் இவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று (12) காலையில் உயிரிழந்தார்.
இரு பிள்ளைகளின் தந்தையான இவர், பெல்மதுளை தர்மாலோக்கா மகா வித்தியாலத்தில் அதிபராகக் கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
எஸ். ஆர் இரவீந்திரன்
