நாடறிந்த எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் காலமானார்

இலங்கையின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மாத்தளை வடிவேலன் நேற்று (10) மாலை காலமானார்.

இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பணியாற்றியுள்ள மாத்தளை வடிவேலன் தன் இலக்கியத் திறமையால் கடல் கடந்தும் அறியப்பட்ட ஓர் எழுத்தாளராவார். அன்னாரின் மறைவுக்கு மலைக்குருவி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

அன்னாரின் இறுதிக் கிரியை மாத்தளையில் நாளை நடைபெறுகிறது.