மட்டக்களப்புவில் "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயல்திட்டம்

நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்ட நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர் ப. தினேஸ் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் இன்று (01) இடம் பெற்றன.

இதன் போது “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்” – அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக் கொண்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மார்ச் மாதம் 01 முதல் “முழு நாடும் ஒன்றாக – தேசிய செயல்” திட்டத்துடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டுப் பிரசுரங்களை, சுவரொட்டிகள் வழங்கட்டு வருகின்றனர்.

மேலும் போதைப்பொருளுக்கு எதிரான வாசகம் கொண்ட ஸ்டிக்கர்கள் பேருந்துகள், முற்சக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது நாட்டின் வளமான மாணவர்கள், இளைஞர் யுவதிகளின் வாழ்வை சீரழிக்கும் போதைப்பொருள் பற்றிய தகவல்களை 1818 எனும் இலக்கத்தினுடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள் சாரணமானவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வரதராஜன்