மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 395 புதிய வீடுகளை அமைக்க கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் கந்துன்னெத்தி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிரந்தர வீடு அற்றவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான நிரந்தர காணி வீட்டு வசதிகளை அமைத்து கொடுக்க உள்ளதாகவும் தமது அரசாங்கத்தினால் இன மத குல பேதம் அரசியல் வேறுபாடுகள் இன்றி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சொன்னார்.
புதிய அரசாங்கத்தினால் தேசிய வீட்டு வசதி திட்டத்திற்கு அமைவாக ஓர் அழகான வாழ்க்கைக்கு இருக்க சொந்த இடம் என்னும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பிரதேச செயலக பிரிவிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட106 பயனாளிகளுக்கான முதல் கட்டமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்
மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ரி. சுபாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். அருள்ராஜ் , அரச உயர் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் வில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு வரதராஜன்
