இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவை யொட்டி மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கணினிக் கூடம் திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சினால் கிளீனிங் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் கணினி அறிவை மேம்படுத்து முகமாக மாணவர்களுக்குக் கணினிகள் மற்றும் உபகரணங்களைக் கொண்ட புதிய கணினிக்கூடம் கையளிக்கும் வைபவம் இன்று (23) காலை நடை பெற்றது
இந்த நிகழ்விற்கு இலங்கை விமானப்படையின் மின்னணுவியல் மற்றும் கணினி பொறியியல் பணிப்பாளர் நாயகம் (DGECE) AVM ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கணனி கூடத்தை இன்று திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்காகக் கையளித்தார்
மட்டக்களப்பு விமானப்படை முகாம் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ரன் ரஜீவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு மட்டக்களப்பு வலயக்கல்வி உயர் அதிகாரிகள் இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்
மட்டக்களப்பு வரதன்





