மட்டக்களப்புவில் யானை வேலி அமைக்கும் பணி துரிதமாகும்

யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் இதற்காக பத்து மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் சகல மக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை எனவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பணிகள் நிறைவடைந்த உடன் இதற்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் திரு. பிரபு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கமைவாக இயற்கை அனர்த்தத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வெப்ப வெட்டுவான் கிராமத்திற்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இக்கிராமத்துவால் மக்களிடம் அவர்கள் காட்டு யணையால் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கேட்டு அறிந்த பின் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மட்டக்களப்பு வரதன்