மண் சரிவினால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாகவே சென்று புனரமைப்பு பணிகளை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி தமக்கு கடவுளாகவே தெரிகின்றார் என்று பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நன்றி தெரிக்கின்றார்கள்.
தேர்தல் காலங்களில் மட்டுமின்றி அனர்த்த நிலைமைகளின் போதும் ஜனாதிபதியின் அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்து வரும் ஜனாதிபதி தமக்கு கடவுளாகவே தெரிவதாகவும்
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வெள்ள அனர்த்தங்களின் நிலைமை மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண செயற்பாடுகள் சம்பந்தமான கள விஜய ஒன்றினை தேசிய மக்கள் சக்தி உறு;பினர் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது பாதிக்கப்பட்டிருந்த மக்கள் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண பணிகள் மிகச் சிறப்பான முறையில் நேர்த்தியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அரசாங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட செங்கலடி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பின்தங்கிய கிராம மக்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்
மட்டக்களப்பு வரதன்



