மீபிளிமான வழியாக நானுஓயா ஆற்றுக்கு செல்லும் ஆக்ரா கிளையாறு இன்று நுவரெலியா பகுதியில் பெய்து அடை மழை காரணமாக மீபிலிமான கிராம விவசாய நிலங்கள் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின்.
இவ்வாறு அடிக்கடி பெய்யும் மழையினால் ஆக்ரா கிளையாறு பெருக்கெடுத்து விவசாய நிலங்கள் பாதிப்பது வழமையான விடயம் ஆகி உள்ளது
இதற்குப் பிரதான காரணம் இந்த கிளையாறு குறுகியதாலும் மற்றும் கிளையாற்றில் கழிவுப் பொருள்கள் மற்றும் வீட்டில் பாவிக்கும் கழிவுகளை கிளை ஆற்றில் வீசுவதன் மூலம் அடைப்பு ஏற்பட்டு இவ்வாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது.
இதனால் மீபிலிமான கிராம விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்குள் வெள்ளநீர் அடிக்கடி உட்புகுவதால் அப்பிரதேசவாசிகள் மிகுந்த அசௌகரிய நிலைமைக்கு முகம் கொடுக்கின்றனர்.
இந்த விடயம் சம்பந்தமாக நுவரெலியா பிரதேச செயலாளருக்கு தெரிவித்ததை அடுத்து ஆக்ரா கிளை ஆற்றினை அகலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
ஆர். எம். சுஹைல்






