தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் மாயம் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ள்ளது.
புறாக்கள் கடந்த சனிக்கிழமை (04) காணாமற்போயிருப்பதாக மிருகக்காட்சிசாலையின் உதவிப் பணிப்பாளர் திருமதி எச். ஏ. டி. பி. சமன்மலி தெகிவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்தியாவிலிருந்து கடந்த ஜூன் மாதம் படகு மூலம் சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட 63 புறாக்களைப் பொலிஸார் பறிமுதல் செய்திருந்தனர்.
அவற்றை மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தபோது, நீதிமன்றம் புறாக்களை தெகிவளை மிருகக்காட்சிசாலைக்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட புறாக்களில் 32 காணாமற்போயிருப்பது தெரியவந்துள்ளது.
புறாக்களைக் கண்டுபிடிக்க தெகிவளைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
