தபால் வேலை நிறுத்தத்தை முடிவுறுத்த இணக்கம்

தபால் வேலை நிறுத்தத்தை முடிவுறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார, ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ, தொழிற்சங்கத்துடன் நடத்திய பேச்சவார்த்தையில் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் காணப்பட்டுள்ளது.

கைவிரல் அடையாள இயந்திரத்தைப் பொருத்தவும் மேலதிகக் கொடுப்பனவைத் தற்போது உள்ளதைப்போல் பேணவும் பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தபால் துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் கடந்த ஆறு நாள்களாகத் தொடர்ந்தது.