முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர் ஆகியுள்ளார்.
வெளிநாட்டுப் பயணம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று காலை 9 மணியளவில் சிஐடியில் ஆஜரானார்.
ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலப் பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணமொன்று தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணை குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவி வகித்தபோது செயலாளராகக் கடமையாற்றிய சமன் ஏக்கநாயக்க, பிரத்தியேக உதவியாளர் சாண்ட்ரா ஆகியோரிடம் சிஐடியினர் ஏற்கனனவே வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
திரு. ரணில் விக்கிரமசிங்க நியுயோர்க் சென்று திரும்பும் வழயில், இலண்டன் பல்கலைககழகப் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றமை குறித்து இந்த விசாரணை நடைபெறுவதாகத் தெரியவருகிறது.

