சூரியவெவ துப்பாக்கிச் சண்டையில் சந்தேக நபர் பலி யான சம்பவம் நேற்றிரவு (21) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்யச்சென்ற பொலிஸ் அதிரடிப்படையினர் மீது சந்தேக நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் சந்தேக நபர் ஒருவர் படுகாயமடைந்தார். அவரைச் சூரியவெவ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பேலியகொடை கொலைச் சம்பவமொன்றின் பிரதான சந்தேக நபர் என்று தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் அதிரடிப்படை வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

