சட்டவிரோத துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் நேற்று 21 ஆம் திகதி இரவு 10 மணியளவில் மஸ்கெலியா சாமிமலையில் இடம்பெற்றுள்ளது.
சாமிமலை கல்தோனி பகுதியில் 2 ஏக்கர் காணியில் விவசாயம் மேற்கொள்ளும் ஒருவரை, சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடனும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்களுடனும் பொலிஸார் கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் இகல இங்கிரிய பகுதியைச் சேர்ந்த 44 வயது உடையவர் என்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவிற்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர் நேற்று இரவு 10 மணிக்கு நடத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று காலை ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவாரென்று மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

